சம்பளத்துடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது
45 நாட்கள் ‘லாஞ்ச்பேட்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கொடுக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மாணவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இது சம்பளத்துடன் கொடுக்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின்போது ஆன்லைன் விற்பனைக்கு முக்கியமானதாக கருதப்படும் சப்ளை செயின் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக்கால விற்பனையை தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில்தான் மாணவர்களுக்கு சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் வழங்க முன்வந்துள்ளது. இதற்காக 21 கல்வி நிலையங்களுடன் ப்ளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனடிப்படையில் பண்டிகை கால விற்பனையை மிகப்பெரிய அளவில் ப்ளிப்கார்ட் நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாக தெரிந்துகொள்ள முடிகிறது.