ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில், மிகவும் பிரபலமான சில ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்டு இயர் எண்ட்சேல் 2022-ன் வாயிலாக பலவித பொருட்களில் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறமுடியும். புது போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? (அ) பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்கள்? எனில் பிளிப்கார்டு இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். இதில் சில சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், மிகவும் விலை உயர்ந்த போன்களை வாடிக்கையாளர்கள் கம்மியான விலையில் வாங்கலாம். சுமார் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் இந்த போன்களை பெற இயலும்.
அதன்படி ஆப்பிள் ஐபோன் 11-ஐ பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் வெறும் ரூ.38,999க்கு வாங்க முடியும். இவற்றில் சுமார் ரூபாய்.4,000 தள்ளுபடி பெறலாம். அத்துடன் பிளிப்கார்டு ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 5% கேஷ்பேக் தள்ளுபடிக்கும் தகுதியுடையவர் ஆவார்கள். பிளிப்கார்டில் ஆப்பிள் ஐபோன் 13ல் ரூபாய்.7,900 கூடுதல் தள்ளுபடியானது கிடைக்கிறது. இந்த போனின் உண்மை விலையானது ரூபாய்.69,900 ஆகும். ஆனால் இப்போது ரூபாய்.61,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டைப் பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். பிளிப்கார்டு இயர் எண்ட்சேல் 2022ல் இப்போனை வெறும் ரூபாய்.9,999-க்கு வாங்க முடியும்.