Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வால்மார்ட் இந்தியாவின் 100% பங்குகளை வாங்கிய பிளிப்கார்ட் ..!!

ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தனது பணிகளை தொடங்க இருப்பதாக ப்லிப்கார்டு தெரிவித்துள்ளது. இதன் முதல்கட்ட செயலாக அழகு சாதன பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.  இந்த புதிய திட்டத்திற்கு ஃப்லிப்கார்டு நிறுவன மூத்த துணைத்தலைவர் ஆதார்ஷ் மேனன் பொறுப்பேற்கிறார். இவருடன் வால்மார்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி சமீர் அகர்வால் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பார்.

வால்மார்ட் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ப்லிப்கார்டு குழுமத்திற்கு மாற்றப்படுவார்கள். இந்தியாவிலேயே விலை குறைந்த பிராண்டாக இருக்கும் வால்மார்ட் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என ப்லிப்கார்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |