Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய மக்கள் – பிளிப்கார்ட் எடுத்த முக்கிய முடிவு…!!

ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று விநியோகிக்க இருப்பதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது

கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அதிக அளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டிற்கு சென்றே டோர் டெலிவரி செய்வதற்கான முயற்சியை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட் செய்து வருவதாக அறிவித்துள்ளது.

முதலில் சோதனை செய்ய ஹைதராபாத்தில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவன இயக்குனர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் “கொரோனா தொற்றுக்கு எதிராக நடக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள அதிக சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டே இந்த சேவையை சோதனை செய்ய தொடங்கியுள்ளோம். அதோடு மக்கள் அவர்கள் பகுதியிலேயே இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள மென்பொருள் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறோம். சரியான நேரத்திற்கு பொருட்களை வீட்டில் சென்று விநியோகிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதனை உறுதிசெய்து ஸ்பென்ஸர் நிறுவனத்தின் இயக்குனர் தேவேந்திர சாவ்லாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |