ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் ஆவுடை பொய்கை தெப்பம் அமைந்துள்ளது. இந்த தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்மிக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கனமழையின் காரணமாக தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியதால் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆன்மீக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கு தேவையான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி விட்டாலும், சில நாட்களிலேயே நீர்மட்டம் குறைந்ததால் மீதமுள்ள தண்ணீருக்காக சுற்றியிருந்த கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து தெப்பத்தை நிரப்பி விட்டனர். இந்நிலையில் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் 11 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி அளித்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.