புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆக இருக்கலாம் என்று மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். புனித நதியாக வர்ணிக்கப்படும் கங்கை நதியில் தற்போது நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வருகிறது. அது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் சடலங்களை இருக்கலாம் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம், பக்சர் மாவட்டம், சவுக்கா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அங்கு சென்றபோது ஆற்றின் கரை ஓரத்தில் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட பல சடலங்கள் கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் அங்கு சுற்றித் திரியும் நாய்கள் அந்தச் சடலங்களை கடித்து குதறி வருவதாகவும் வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை பார்த்த அதிகாரிகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பீகார் அரசு கூறிய போது பீகார் மாநிலத்தில் சடலங்களை ஆற்றில் விடப்படும் வழக்கம் இல்லை. இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு இறந்து போகும் சடலங்களை உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசி விடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணையும் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.