வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சுவிட்சர்லாந்திலிருக்கும் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவையும் எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும் ஏரியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்விட்சர்லாந்தில் பெய்து வரும் கனமழையால் Zug என்னும் மாவட்டத்தில் உள்ள Reuss என்னும் ஆற்றின் கரை பகுதி உடைந்துள்ளது. இதனால் உடைந்த ஆற்றின் கரை பகுதியிலிருந்து மிக வேகமாக வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதால் அங்கிருக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறியுள்ளார்கள்.
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்.