சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றத்தால் வருகின்ற 2030ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருக்கும் கடலோர நகரங்கள் மிகவும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருங்கடல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 600க்கும் மேலான பெரிய அலைகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள கடல் பகுதிகள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள செய்து குறிப்பாவது, சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தையும் காரணமாகக் கொண்டு வருகின்ற 2030ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்கரையில் அமைந்திருக்கும் பகுதிகள் மிகவும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.