Categories
உலக செய்திகள்

சேயை காப்பாற்றிய பின் தாய் இறந்த சோகம்…. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கை…. தீவிரமாக நடைபெறும் மீட்புப்பணி….!!

தன்னுடைய 4 மாத குழந்தையை மீட்புப் பணியாளர்களிடம் தூக்கி வீசி காப்பாற்றிய பின் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சீனாவில் கடந்த 1,000 வருஷத்தில் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்திலிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்புக்குழுவினர்கள் உதவி கரம் நீட்டி மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஒரு தாய் தன்னுடைய 4 மாத குழந்தையுடன் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருப்பதை மீட்புக்குழுவினர் கண்டுள்ளார்கள்.

இதனையடுத்து குழந்தையையும், தாயையும் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து அந்த தாய் மீட்புக்குழுவினர்களிடம் தன்னுடைய குழந்தையை தூக்கி வீசி வீசிய பின் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அந்தத் தாய் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |