மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னையின் பல பகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் எந்தெந்த போது அத்தியாவசிய பொருட்கள், அடிப்படை வசதிகளின்றி பாதிப்படைகின்றார்களோ, அந்த பகுதியில் திமுக நிர்வாகிகள் உடனடியாக தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து ஏராளமான திமுக நிர்வாகிகள் நேற்று முதலே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விடுகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று காலை நேற்று இரவு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உமழை பெய்து வெள்ளக்காடாய் மாறியுள்ள சென்னையின் பல பகுதிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகின்றார்.