கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் சென்ற மாதம் முழுவதும் தீவிர மழை பெய்தது. எதிர்பார்த்த அளவை விட அதிக கனமழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ஆடு, மாடுகள், மற்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. மேலும் சில இடங்கள் மழையால் தீவு போல் காணப்பட்டது. ஆனால் தற்போது அசாமில் மழை குறைய தொடங்கி இருக்கிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 30 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இதில் 110 பொதுமக்கள் பலியானதாகவும், 56,89,584 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.