Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குற்றால அருவியில் வெள்ள பெருக்கு” இன்றும் குளிக்க தடை ….!!

அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் நேற்று முதலே வந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலையில் இருந்தே இங்கு மேலும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி , ஐந்தருவி , பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை முதல் வெள்ளபெருக்கு ஏற்பட கூடிய நிலையில் நேற்று மட்டும் இரண்டு முறை குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது குற்றாலத்தில் அதிகமான தண்ணீர் வரும் காரணத்தினால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தற்போது வரை தடை தொடர்ந்து வருகிறது.

Categories

Tech |