அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 112 பேர் பலியாகியுள்ளனர்.
அசாமின் வடக்கு பகுதியிலும் பிஸ்வந்த், பக்சா போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. லக்கிம்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி்ன் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அசாமில் வெள்ளத்தால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கோரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் லக்கிம்பூரில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. கால்நடைகளும் மக்களும் பல இடங்களில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளத்தால் பல இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.