Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் மழை…. வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 28 பேர் பலி….!!!

பாகிஸ்தான் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக ஏற்பட்ட வெள்ளத்தில் தற்போது வரை 1136 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளும் மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்திருக்கும் தகவலில், ஒரே நாளில் 28 நபர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1136 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 1634 ஆகவும் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் சராசரியாக 7-ல் ஒரு நபர் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 157 பாலங்கள் சேதமடைந்து அடித்து செல்லப்பட்டிருக்கிறது.

Categories

Tech |