அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்த புயல் தாக்கியதில் அம்மாகாணத்தில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், மின்தடையால் இருளில் மூழ்கி போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பேரழிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் இந்த புயலில் புளோரிடா மாகாணம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு துன்பத்தில் மூழ்கி கிடக்கிறது என்று கூறியிருக்கிறார்.