Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதித்த வியாபாரம்… தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள மார்க்கெட்… திரளான விவசாயிகள் விற்பனை..!!

தற்காலிக பூ மார்க்கெட் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்படும் பூக்கள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் பூக்களை சாலையோரங்களில் விற்பனை விற்பனை செய்து வந்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்ததோடு அவர்களிடமிருந்த பூக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தற்காலிக பூ கடை திறக்கப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பூக்கடைகளில் விற்பனை செய்துள்ளனர். அதில் முல்லைப்பூ, மல்லிகை பூ கிலோ ரூ.300-க்கும், அரளிப்பூ ரூ. 50-க்கும், கனகாம்பரம் ரூ.100-க்கும், செண்டுமல்லி, கோழிக்கொண்டை ஆகியன ரூ. 20-க்கும் விற்பனையாகியுள்ளது.

Categories

Tech |