Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் ஜப்பான் நாட்டு மலர்கள்..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன.

 

Image result for குன்னூர் சிம்ஸ் பூங்கா

7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு முதலில் மலரும் பூ வெள்ளை நிறமாகவும் பிறகு படிப்படியாக நீல நிறம், ரோஸ் என  5 நிறங்களில் மாறி பின்னர் வாடிவிடும் தன்மை கொண்டதாகும். குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்கும் இந்த மலர்கள் படகில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது.

Categories

Tech |