பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அப்படி பட்ட பூக்களை குறித்து இதில் பார்ப்போம்.
பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும்.
அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும்.
முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
செந்தாழம்பூ- தலைவலி, கபம், ஜலதோஷம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.