அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுயுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.காணிகரஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் அவர் வீட்டின் அருகில் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சுமதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.