Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் 35 நிமிடங்கள் பறந்த கார்.. வெற்றியடைந்த சோதனை..!!

ஸ்லோவாக்கியா நாட்டில் பறக்கும் வாகன சோதனை 35 நிமிடங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ஸ்லோவாக்கியாவில் Nitra மற்றும் Bratislava போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு  இடையில் பறக்கும் வாகனம், சுமார் 35 நிமிடங்கள் வெற்றிகரமாக பயணித்துள்ளது. இந்த பறக்கும் வாகனத்தில் BMW-வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக உபயோகப்படுத்தப்படும், பெட்ரோல்-பம்ப் எரிபொருள்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த பறக்கும் வாகனம் விமானமாக, 2 நிமிடங்கள் 15 நொடிகளில் மாறுகிறது. எர்கார் படைப்பாளரும், பேராசிரியருமான Stefan Klein, இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் வாகனம் 1000 சி.மீட்டர் மற்றும் 8,500 அடி உயரத்திற்கு பறக்கும் எனவும் தற்போது வரை சுமார் 40 மணிநேரங்களுக்கு அந்தரத்தில் பறந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பறக்கும் வாகனத்தின் பயணம் மிக சிறப்பாக அமைந்தது. நடுவானத்தில் ஒரு மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. 200 கிலோ எடை தாங்குகிறது. இரண்டு நபர்கள் பயணிக்கலாம். இதனை ட்ரோன் போன்று பறக்க வைக்க இயலாது. பறப்பதற்கு மற்றும் தரை இறங்குவதற்கு ஓடுபாதை அவசியம் என்று பேராசிரியர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |