தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்ட பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ராஜபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் தனியார் லாரி நிறுவனர் ஒருவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்துள்ளனர்
தேர்தல் நேரத்தில் அதிக அளவிலான பறக்கும் படைகள் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து தேர்தல் குறித்து எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெறக் கூடாது என்றும் தேர்தல் நேரங்களில் எந்த ஒரு பணப் பட்டுவாடாவும் செய்யப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் பறக்கும் படையானது தீவிர சோதனையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறது
இதனை தொடர்ந்து ராஜபாளையம் பகுதிக்கு அருகில் கொல்லம் முதல் நாமக்கல் வரை செல்லக்கூடிய மூட்டைகளை ஏற்றிச் செல்லக்கூடிய லாரி ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர் இந்த சோதனையில் அந்த லாரி உரிமையாளரிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது அதற்கான காரணமாக முட்டை வியாபாரத்தில் கேரளாவிலிருந்து வாங்கி வந்த பணம் என்று அவர் விளக்கம் கூறியுள்ளார்
இதனைத் தொடர்ந்து முறையான ஆவணங்களை கொடுத்து பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் இருந்தே பெற்று கொள்ளுங்கள் என்று கூறி பறக்கும்படையினர் மாவட்ட ஆட்சியரிடம் பணத்தை ஒப்படைத்தனர்