தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தீவிரவாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவிலில் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் ஹெலிகாப்டரில் வந்தவர் சீதாராமன் என்பதும் இவர் கேரள மாநிலத்தில் நகைக்கடை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவர் தனது சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலில் உள்ள குலதெய்வத்தை வழிபடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.