உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையில் எம்.எல்.ஏ ரவி அடிக்கல் நாட்டியுள்ளார்.
அரக்கோணம் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து செல்வதற்காக சாலை வசதி இல்லாமல் ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையின்படி அனந்தபுரம் தக்கோலம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் 13 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடை நடந்துள்ளது. இந்த பூமி பூஜை ஆனந்தபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், தக்கோலம் பேரூர் செயலாளர் பச்சையப்பன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.