சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார்.
கோரோனோவிற்கு நாட்டு மருந்து போதும் என கூறிய அவர், ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 மிலியும், மற்றவர்கள் 60 மிலியும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவளை சூப் செய்து பருகலாம் என தெரிவித்துள்ளார். வாரத்தில் ஒருமுறை நிலவேம்பு கசாயம் குடித்தால் கொரோனா உங்கள் பக்கம் வராது என்கிறார் வீரபாபு. அதுமட்டுமின்றி அரசு விரும்பினால் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தை இலவசமாகப் பார்க்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.