சூரியன், பூமி மற்றும் நிலவு போன்றவைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியிலிருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும். அந்த சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 2:39 மணியளவில் ஆரம்பம் ஆகிறது.
அதன் பிறகு முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:39 மணிக்கு தொடங்கி 5:12 மணி வரை இருக்கும். இந்த சந்திர கிரகணமானது சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கும் என்று அறிவியலாளலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு அடுத்து 3 வருடங்கள் கழித்து முழு சந்திர கிரகணம் ஏற்படும்.
வருகிற 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி பகுதி நேர சந்திர கிரகணம் இருக்கும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சென்னையில் இந்த சந்திர கிரகணமானது மாலை 5:42 மணியளவில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்துக் கொள்ளலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்