Categories
மாநில செய்திகள்

இத செய்ங்க… “இல்லன்னா அபராதம் கட்டுங்க”… விஜயபாஸ்கர் அதிரடி…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வு பிரச்சனையில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை கொடுத்துவிட்டு, பணி நியமன ஆணையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் அவர் கொரோனா நடவடிக்கைகளை குறித்துப் பேசும் பொழுது, யாரெல்லாம் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு புதிய அவசர சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |