Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமை தொடர்ந்து!…. தேனிசை தென்றல் தேவா செய்த காரியம்….. வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சில்லு வண்டுகள் என்ற திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவா தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனையடுத்து இசையமைப்பாளர் தேவா தன்னுடைய ரசிகர்களுக்காக முதன்முதலாக ஒரு ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, வணக்கம்! உங்கள் அனைவரையும் இணைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் தேவாவும் பல வருடங்களுக்குப் பிறகு டுட்டரில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |