மீரா மிதுனைத் தொடர்ந்து அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். அதன் பிறகு தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அவர் மீது போலீஸில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவரை கைது செய்யும் போது அவர் கதறி அழுது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.