Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது: பிசிசிஐ அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டார். கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “உங்களுடைய ஒத்துழைப்பு கொரோனைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி இருக்கிறது,” என்றார். ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு வருகிறீர்கள் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கு இந்தியா முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்திய ரயில்வே நிர்வாகம் மே 3ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என அறிவித்தது. அதேபோல, இந்தியன் பிரீமியர் லீக்கை தற்போதைக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட்டு என தெரிவித்துள்ளது.

Categories

Tech |