நடிகை கீர்த்தி செட்டி தமிழில் கூடுதல் கவனம் செலுத்துகின்றார்.
வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் தோல்வியையே சந்தித்தார். தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் நடித்தார். அதுவும் வரவேற்பை பெறவில்லை. தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தெலுங்கு திரை உலகில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்துகின்றார். பாலாவின் வணங்கான் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகின்றது. இதன் பிறகு கீர்த்தி ஷெட்டி தமிழில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கின்றார். இதற்காக சில தமிழ் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருகின்றாராம்.