Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தை தொடர்ந்து…. அஜித் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் 3 படங்கள்…. வெளியான தகவல்…!!!

‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் 3 புதிய படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க இருப்பதால் அந்நாட்டு அனுமதிக்காக படக்குழு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாக முன்பாகவே தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமான சுதா கொங்கரா படத்திலும், அதற்கடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்திலும் அஜித் நடிக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |