Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ வெற்றியைத் தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரஜிஷா விஜயன்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் முன்னணி நடிகருக்கு ஜோடியாக உள்ளார்.

மலையாள திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.இந்த முதல் படத்திலேயே அவர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இதை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ரஜிஷா விஜயன்.

இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

சர்தார் படத்தின் போஸ்டர்

மேலும் இப்படத்தில் பிரபல நடிகை ராஷி கண்ணாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். கார்த்தி இரட்டை வேடத்தில் மிரட்டவிருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். எனவே படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |