மாநாடு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க முடியாது என்று தெரியவந்துள்ளது.
அதன்படி தெலுங்கில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாகவும் வில்லனாக ரவிதேஜாவும் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தின் கதை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைக்கவும் வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்குப் பிறகு தெலுங்கில் கிச்சா சுதீப் நடிக்க உள்ள படத்தையும் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இப்படி தொடர்ந்து தெலுங்கில் ஆர்வம் காட்டிவரும் வெங்கட் பிரபு இப்போதைக்கு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.