சம்யுக்தா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். சில மாதங்களுக்கு முன் வெளியான ”துக்ளக் தர்பார்” திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் அறிமுகமாக உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியை சினேகா மற்றும் செந்திலுடன் இவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.