ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிக மோசமான பழக்கம். ஒருமுறை சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு ஏற்றி சாப்பிடுவது. இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலும்,
ஒரு சில உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால், பக்க விளைவுகளையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி ஏராளமான மருத்துவ செலவுகளை நமக்கு இழுத்துவிடும். அந்த வகையில், ஒரு முறை சமைத்த உணவை மீண்டும் சூடேற்றி சாப்பிடக் கூடாது என்பதற்கான சில உணவுப் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உருளைக்கிழங்கை சாப்பிடும் போது அதில் உள்ள பாக்டீரியாக்களால் உடல் உபாதைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.
கீரை, பீட்ரூட் ஆகியவற்றையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதில், உள்ள நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும் போது நைட்ரைடுகளாக மாறி புற்றுநோயை உண்டாக்கும் பண்பை செல்களில் ஏற்படுத்தக்கூடியது.
இறைச்சி, முட்டை, காளான் ஆகிய உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன்கள் சூடேற்றப்பட்டு வயிறு உபாதைகள் உள்ளிட்ட பல பக்கவிளைவு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. அதிலும், காளான் வகை உணவுகளை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.