நாம் அன்றாடம் உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பூசனம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஜைகளில் உயிர் பறிக்கும் வகையும் உண்டு. எனவே முடிந்த அளவு பூசணம் பூத்த ரொட்டிகள் மட்டுமல்லாமல், கெட்டுப்போன உணவுகளையும் அறிந்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
தூங்கி எழுந்தவுடன் காபி, டீ உள்ளிட்டவற்றை பருகினால் அது நாளடைவில் அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்திவிடும். தூங்கி எழுந்தவுடன் குடல் மென்மையாக இருக்கும். எனவே சூடாக இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் குடலுக்கு தீங்கு தான். இதற்கு பதிலாக, தண்ணீர் குடித்தால் மிக மிக நல்லது. தூங்கி எழுந்தவுடன், அரை கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்களுக்கு தங்களின் கனவுகளை நினைவுக்கு கொண்டு வரும் வாய்ப்பு அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தை கருவில் இருக்கும் போது அதன் தாய் உண்ணும் உணவின் அடிப்படையிலேயே குழந்தையின் ருசி உணர்வு அமைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே பெரியோர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்தந்த மாதகாலம் கர்ப்பிணி பெண்கள் சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.