சத்துக்கள் பல நிறைந்த தேங்காய்ப்பாலில் பாயாசம் செய்வது பற்றி இந்த தொகுப்பு
தேவையான பொருட்கள்
தேங்காய் – ஒன்று
வெள்ளம் – அரை கிலோ
முந்திரி – 10 கிராம்
ஏலக்காய் பொடி – 2 தேக்கரண்டி
பச்சரிசி – ஒரு கப்
கிஸ்மிஸ் பழம் – 10 கிராம்
செய்முறை
- அரிசியை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- வானொலி ஒன்றில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் பழம் மற்றும் முந்திரியை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- மூன்று முறை தேங்காய் பாலை எடுத்து தனித்தனியாக பிரித்து வைக்கவும்.
- பின்னர் மூன்றாவது முறை எடுத்த பாலை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும்.
- பால் கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை அதனுடன் சேர்த்து வேக விடவும்.
- அரிசி வெந்தவுடன் வெல்லத்தில் தண்ணீர் தெளித்து கரைத்து வெந்த அரிசியுடன் சேர்த்து விடவும்.
- இரண்டும் சேர்த்து கொதி வந்தவுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி வறுத்து வைத்துள்ள கிஸ்மிஸ் முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து முதலில் எடுத்த தேங்காய் பாலையும் ஊற்றி கொதித்தவுடன் இறக்கி விடவும்.
- இப்போது சுவைமிக்க தேங்காய் பால் பாயாசம் தயாராகிவிட்டது
தேங்காய்ப்பாலில் வைட்டமின் சி 3 பிசிக்ஸ் சேலம் பாஸ்பரஸ் மெக்னீசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன தேங்காய் பாலை உணவில் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
எலும்புகள் வலுப்பெறும்
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
உடல் பருமனை குறைக்க உதவும்
முடி உதிர்வதை தடுக்கும்