உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் 5 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு 500க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர். எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பழைய நாணயங்கள் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவும், பழைய நாணயங்களை சேகரிப்பதற்காக இந்த அறிவிப்பை விடுத்ததாக பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.