மலேசியாவில், உணவு விநியோகிப்பவர் உணவகத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததில் பொறுமை இழந்து, தானே பரோட்டா செய்த சம்பவம் நடந்திருக்கிறது.
நாம் உணவை ஆர்டர் செய்துவிட்டு வீட்டில் காத்துக்கொண்டிருப்போம். அப்போது உணவு விநியோகிப்பவர் தாமதமாக வந்தால், நம்மால் பொறுக்க முடியாது. சிலர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், உணவு விநியோகிப்பவர்களின் நிலை என்ன? என்பது நமக்கு தெரியாது.
அந்த வகையில், மலேசியாவில், ஒரு உணவகத்தில் உணவு விநியோகிப்பவர் வரிசையில் காத்திருந்திருக்கிறார். நேரம், செல்ல செல்ல, பொறுமையை இழந்த அவர், தானே பரோட்டா மாஸ்டராக மாறிவிட்டார். அதாவது, அவரே சென்று மாவை பிசைந்து பரோட்டா செய்திருக்கிறார்.
அவர், பரோட்டா செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவருக்கு பரோட்டா செய்வதில் அதிக அனுபவம் இருப்பது போல் தெரிகிறது. வீடியோவை பார்த்த சிலர், மலேசியாவில், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்கள்.