குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு மொத்தம் 182 தொகுதிகள் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல் நெருங்குவதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் தேர்தல் அறிக்கையை குஜராத் மாநிலத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி,
1. நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டறிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு குழு உருவாக்கப்படும்.
2. பொது சிவில் சட்டமானது முழுமையாக அமல்படுத்தப்படும்.
3. ரூபாய் 10,000 கோடியில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
4. நாட்டுக்குள் அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.
5. அடுத்து 5 வருடங்களில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
6. அடுத்த 5 வருடங்களில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
7. குஜராத் மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு அதாவது பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
8. பெண் குழந்தைகள் எல்கேஜி முதல் முதுகலை வரை இலவச கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்.
9. குஜராத்தில் பொருளாதார வளர்ச்சியானது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படும்.
10. மாநிலம் முழுவதும் 3 வேலைகளிலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் விதமாக 100 அன்னபூர்ணா ஹோட்டல்கள் தொடங்கப்படும். போன்ற பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.