பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு தினமும் என்ன உணவு கொடுத்து விடுவது எனும் குழப்பம் பல தாய்மார்களுக்கு இருக்கும். தினமும் ஒரே வகையாக கொடுத்துவிட்டாள் பிள்ளைகளுக்கும் சாப்பிட தோணாது மாறாக இந்த தாளிச்ச சாதம் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.
தாளிச்ச சாதம் செய்வது பற்றிய தொகுப்பு
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
தக்காளி – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
வத்தல் – 2
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
எண்ணையில் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் அனைத்தும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதில் வத்தல் கொத்தமல்லி பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளியை விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக அறிந்து வைக்கவும்.
வதக்கிய வத்தல் கொத்தமல்லி உடன் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து கிளறவும்.
இறுதியாக தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் எடுத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
தாளிச்ச சாதம் தயாராகிவிட்டது