Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பேருந்தில் தங்கிய நேபாளிகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்

சேலத்தில் விபத்துக்குள்ளாகிய உருக்குலைந்த நிலையில் இருக்கும் பேருந்திலேயே தங்கியிருக்கும் நேபால் நாட்டவர்களுக்கு வருவாய் வரித்துறையினர் உணவு வழங்கினார்

நேபாள நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து ஓமலூர் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வந்த 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய சிலர் உருக்குலைந்த நிலையில் உள்ள அவர்களது பேருந்திலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து அவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உணவு வழங்கி பசி ஆற்றினர்.

Categories

Tech |