Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி 3 வேளையும் இலவச உணவு… மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு… அமைச்சர் கூறிய தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று ஊழல் தடுப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலுப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் 45 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 7 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |