புனேவில் உணவகம் ஒன்றில் நாலு கிலோ எடை உள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று அடிக்கடி ஆஃபர்களை அவ்வப்போது வழங்குவது வழக்கம். அந்த வகையில் 4 கிலோ எடையுள்ள இந்த அசைவ சாப்பாட்டை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு புல்லட் பைக் பரிசு என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உணவின் மொத்த விலை 2,500. இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமானோர் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் சோம்நாத் பவர் என்பவர் கலந்து கொண்டு வண்டியை பெற்றுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.