மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விழுப்பனூர் பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமாவிற்கும் சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளின் 2 – வது குழந்தையான ஜெயப்பிரியா கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள் காலையில் ஜெயபிரியாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் ஜெயபிரியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெயபிரியாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.