Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள்… தொழில் தொடங்க வேண்டுமா… இதோ அரசு மானியம்.. ஆட்சியர் தகவல்…!!!

குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் படி மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணெய், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களும் உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளிட்டவருக்கும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் ஆரம்பித்தல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்ப பயிற்சிகள் குழு அடிப்படையில் பொது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் குறுநிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடும் 90% கடனும் அவற்றில் அதிகபட்சமாக 35 சதவீதம் அல்லது 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. மேலும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |