பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே இருக்கும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று முன்தினம் பாலக்கோடு பகுதியில் இருக்கும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், உணவு கடைகள் உள்ளிட்ட கடைகளில் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 6 குட்கா, புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார்கள். மேலும் இரண்டு கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள் மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத உணவு வகைகள் வைத்திருந்ததால் கீழே கொட்டப்பட்டது. அந்த இரண்டு கடைகளுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது.