இலங்கையில் உணவு பற்றாக்குறை காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, உணவு பற்றாக்குறையால் 40 லிருந்து 50 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார். அதேநேரத்தில், எம்பிக்கள் அனைவரும் இலங்கையின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு நேரடி முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
மேலும், நிலையை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே இலங்கையில் தரிசாக உள்ள 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விளைநிலங்களாக்கி உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து வருங்காலத்தில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் செயல்படும் திட்டத்தில் ராணுவம் கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் அந்நாட்டில் உணவு பாதுகாப்பு திட்டங்களை முன்னேற்றுவதற்காக இராணுவத்தினர் பசுமை விவசாய வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.