Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவில் வளாகத்திலேயே சமையல்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியினை மாவட்ட உதவி ஆணையர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார்.

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாசாணியம்மன் கோவிலில் இருக்கும் இடத்தில் வைத்து உணவு சமைத்து பொள்ளாச்சி, கோட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உணவினை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |