Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குப்பை லாரியில் கொண்டு போனாங்களா…? முன் களப்பணியாளர்களுக்கு உணவு… கோவையில் பரபரப்பு…!!

முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களை குப்பை ஏற்றும் லாரியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி முழுவதும் ஒரு வார்டுக்கு 50 பேர் வீதம் முன் களப்பணியாளர்கள் 100 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர். இந்நிலையில் இந்த முன் களப் பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் இலவசமாக மதிய உணவை வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள் மாநகராட்சி வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து சிங்காநல்லூர் பகுதியில் வேலை பார்க்கும் முன் களப் பணியாளர்களுக்கு மதிய உணவு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட உணவு பார்சல்களை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சுகாதார ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |